திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த நல்லமநாயக்கன்பட்டி சேர்ந்தவர் துரைக்கண்ணு. இவர், அதேபகுதியில் உள்ள தனியார் பத்திரிக்கை நிறுவனத்திற்குச் சொந்தமான பண்ணையில் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில், இவரது மகன் மூவேந்திரன் பண்ணையில் வேலை பார்த்து வரும் துரை கண்ணுக்குச் சாப்பாடு எடுத்துச் சென்றுள்ளார்.
டிராக்டரில் சிக்கி உயிரிழந்த சிறுவன்! - School boy died
திருச்சி: மணப்பாறை அருகே பத்தாம் வகுப்பு படித்த மாணவன் டிராக்டர் சுழல் கலப்பையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அப்போது பண்ணையில் உழவு வேலையில் ஈடுபட்டிருந்த டிராக்டர் ஓட்டுனர் சுழல் கலப்பையில் புற்கள் மாட்டியுள்ளதா என சிறுவனை அழைத்துப் பார்க்கச் சொல்லியுள்ளார். இதையடுத்து, திடீரென்று சுழல் கலப்பை இயங்கியதால் சிறுவனின் தலை மற்றும் கை, கால்களில் காயம் ஏற்பட்டது.
உடனே அருகிலிருந்தவர்கள் சிறுவனை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இருப்பினும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து புத்தாநத்தம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.