திருச்சி: மணப்பாறை அடுத்த பொன்னம்பலபட்டி சுங்கச்சாவடி ஊழியர்கள் இன்று காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் முன் தரையில் அமர்ந்து முற்றுகையில் ஈடுபட முயன்றனர்.
அப்போது அங்கிருந்த காவலர்கள் அவர்களை அப்புறப்படுத்தி பிரச்னை குறித்து புகார் அளிக்கும் படி கூறினர்.
இதையடுத்து சுங்கச்சாவடி மேலாளர் சார்லின் தாமஸ் ராஜ் அளித்தப் புகாரில்,"நேற்று (டிச.13) மாலை திண்டுக்கல்லிலிருந்து திருச்சி நோக்கி சென்ற TN-81 C-8467 என்ற எண் கொண்ட கார் பாஸ்டேக் லேன்-ல் வந்ததாகவும், அந்த வாகனத்திற்கு முன்பாக வேறு ஒரு வாகனம் செல்லாமல் இருந்ததால் பணியிலிருந்த இளங்கோ என்பவர் வண்டியைப் பக்கத்து லேன்-ல் செலுத்தும் படியும் அறிவுறுத்தினார்.
ஆனால், வண்டியில் இருந்தவர்கள் அதனை ஏற்க மறுத்து, தன்னை மாற்று வழியில் செல் எனக் கூற நீ யார்? எனத் தகாத வார்த்தைகளால் பேசினர்.
மேலும், திருச்சியிலிருந்து பாஜக நிர்வாகிகள் எனக் கூறி சிலரை வரச்சொல்லி தன்னையும், தனது ஊழியர்களான இளங்கோ, ஸ்டீபன், செல்வபிரபு, செந்தில் குமார் உள்ளிட்ட ஊழியர்களையும் தாக்கிவிட்டு ஓடிவிட்டனர்.