தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சியில் திமுக அரசைக் கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் - DMK government

திருச்சியில் பால் விலை, மின்கட்டணம், சொத்து வரியை உயர்த்திய திமுக அரசைக் கண்டித்து திருச்சியில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சியில் திமுக அரசை கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சியில் திமுக அரசை கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

By

Published : Nov 15, 2022, 4:21 PM IST

திமுக அரசு பதவி ஏற்ற பின்பு பால் கட்டணம், மின் கட்டணம், சொத்து வரி உயர்வு ஆகியவற்றை உயர்த்தியுள்ளது. இதனைக்கண்டித்து இன்று(நவ.15) தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பாஜக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி - தென்னூர் பகுதி மண்டலத்தலைவர் பரஞ்சோதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட துணைத்தலைவர் சந்துரு கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். வர்த்தக பிரிவு மாநிலச்செயலாளர் தீபக் ரங்கராஜ், மாநில செயலாளர் ஸ்ரீராம், மாவட்ட வர்த்தக பிரிவு துணைத்தலைவர் மகேஸ்வரி, மாவட்டத் துணைத்தலைவர் சாய் பிரசாத், மாநில பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரி விஸ்வநாதன், கலந்துகொண்டு தமிழ்நாடு அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இதேபோல் திருச்சி மார்க்கெட் பகுதி செயலாளர் பழனிக்குமார் தலைமையில் மார்க்கெட் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பிரசாரப்பிரிவு மாவட்ட தலைவர் ரவிக்குமார் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

வர்த்தக பிரிவு மாவட்ட செயலாளர் லோகநாதன், மாவட்ட செயலாளர் சதீஷ், முன்னாள் மாவட்ட இளைஞர் அணி தலைவர் சுதகார், மாவட்ட மகளிரணி செயலாளர் மலர்கொடி, மாவட்ட செயற்குழ கேசவன், மார்க்கெட் மண்டல பொதுச்செயலாளர் தமிழ் வேந்தன், வார்டு குழு தலைவர் வீரக்குமார் விக்னேஷ் ஜெயகணேஷ், மண்டலச் செயலாளர் முத்துசெல்வன், மத்திய நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலாளர் சாண்டில்யன், கூட்டுறவுப் பிரிவு மாவட்டச் செயலாளர் மரக்கடை வினோத், பேட்டரி கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு தமிழ்நாடு அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

திருச்சியில் திமுக அரசை கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

இதையும் படிங்க:தமிழகத்திற்கு 7 மருத்துவ கல்லூரி வேண்டும் - மத்திய அரசிடம் ராமதாஸ் கோரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details