தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டீ குடிக்கச் சென்ற பாஜக நிர்வாகி வெட்டி படுகொலை - பாஜக நிர்வாகி கொலை திருச்சியில் பரபரப்பு

திருச்சி: காந்தி மார்கெட்டில் பாஜக நிர்வாகி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

murder
murder

By

Published : Jan 27, 2020, 11:07 AM IST

திருச்சி காந்தி மார்கெட் அருகே உப்புப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் விஜய ரகு (39). இவர் காந்தி மார்கெட்டில் வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் பணி செய்து வந்தார். பாஜகவின் திருச்சி பாலக்கரை மண்டலச் செயலாளராகவும் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை 5.30 மணியளவில் காந்தி மார்கெட் நுழைவுவாயில் அருகே உள்ள தேநீர் கடைக்கு தேநீர் குடிப்பதற்காகச் சென்றார்.

அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் விஜய ரகுவை வழிமறித்து சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடினர். ரத்தவெள்ளத்தில் உயிருக்குப் போராடிய விஜய ரகுவை அருகிலிருந்தவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், விஜய ரகு பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காந்தி மார்கெட் காவல்துறையினர் இறந்தவரின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தக் கொலை சம்பவத்தில் இஸ்லாமியர்களுக்குத் தொடர்பு இருப்பதாக பாஜகவினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். கொலை செய்யப்பட்ட விஜய் ரகுவுக்குத் திருமணமாகி ஒரு மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய ரகுவை வெட்டிய நபர்களும் அதே உப்புப்பாறைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

முன்விரோதம் காரணமாக இச்சம்பவம் ஏதும் நடந்துள்ளதா? என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: 'அமைச்சரின் பேச்சு அறியாமையைக் காட்டுகிறது' - ஆ. ராசா கண்டனம்

ABOUT THE AUTHOR

...view details