தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுபான கடையை அடித்து நொறுக்கிய பாஜக பிரமுகர் மகன் - திருச்சி கிரைம் செய்திகள்

மணப்பாறையில் உள்ள மதுபான கடையை அடித்து நொறுக்கிய பாஜக பிரமுகரின் மகனைக் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

பாஜக பிரமுகர் மகனுக்கு வலை
பாஜக பிரமுகர் மகனுக்கு வலை

By

Published : Sep 28, 2021, 10:44 AM IST

திருச்சி மாவட்டம் வயலூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வ குமார் (54) மணப்பாறையில் தனியார் மதுபான கடை வைத்து நடத்திவருகிறார். இவரது கடைக்கு நேற்று முன்தினம்(செப். 26) இரவு மது அருந்திய நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரத்தில் ஒருவர் மதுபான கடையிலிருந்த டேபிள், சேர் உள்ளிட்ட பொருள்களைச் சூறையாடினார். இதனைக் கண்டு தடுக்க முயன்ற மதுபான ஊழியர்களையும் அவர்கள் எச்சரித்துவிட்டுச் சென்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மதுபான கடை உரிமையாளர் செல்வ குமார் மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அப்புகாரின் பேரில் வழக்குப்பதிந்த காவல் துறையினர், கடையிலிருந்த சிசிடிவியைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

சிசிடிவி

முதற்கட்ட விசாரணையில் மதுபோதையில் தகராறு செய்தவர் மணப்பாறை பாஜக பிரமுகர் மோகன்தாஸ் மகன் தீபன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல் துறையினர் தற்போது தலைமறைவாகவுள்ள தீபன், அவருடன் இருந்த நண்பர்கள் அசார், மயில் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க:திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விபத்து: 4 வயது சிறுவன் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details