திருச்சி: திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “அரியலூர் மாவட்டத்திற்கு சென்று சகோதரி லாவண்யா குடும்பத்தினரை சந்தித்து ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கிவிட்டுவருகிறோம்.
மாநிலத்தின் முதலமைச்சரால் அனைவருக்கும் சமமாக நியாயம் கிடைக்க வேண்டுமென்று என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. அரசியல் லாபத்திற்காக தொடர்ச்சியாக பேசிக்கொண்டிருந்த ஒரு கட்சி இன்றைக்கு பாடம் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.
முன் இல்லாத அளவுக்கு இப்போது தமிழ்நாடு காவல்துறை அழுத்தத்தில் இருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் காவல்துறையை சுதந்திரமாக செயல்பட வழிவகை செய்ய வேண்டும். வீடியோ எடுத்தவர் யார் என்பதை விட வீடியோ உண்மையா என்று பாருங்கள்.