சென்னை வேளச்சேரியில் உள்ள அட்வென்ட் கிறிஸ்தவ சபையின் பிஷப் எஸ்.டி. டேவிட். இவர், வேளச்சேரி காந்திரோடு மகாசபை வளாகத்தில் சபைக்கு சொந்தமாக ரூ.50 கோடி மதிப்பில் நிலத்தை, திருச்சியைச் சேர்ந்த ஒரு தரப்பிற்கு விற்பனை செய்து, முன் பணமாக ரூ. 3.75 கோடி பெற்றுள்ளார்.
நிலமோசடி வழக்கில் பிஷப்பிடம் காவல்துறையினர் விசாரணை! - Advent Christian Church
திருச்சி: ரூ. 50 கோடி மதிப்புள்ள நிலத்தை கையாடல் செய்த வழக்கு தொடர்பாக சென்னை பிஷப்பிடம் திருச்சி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், அந்த ரொக்கத்தை சபையின் வங்கிக்கணக்கில் வரவு வைக்காமல், கையாடல் செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல், திருச்சியை சேர்ந்தவர்களுக்கு நிலத்தை பத்திரப்பதிவு செய்து கொடுக்காமல் இழுத்தடிப்பு செய்துள்ளார். இதனால் இவர் மீது திருச்சி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்ததோடு, அவரை சென்னையிலிருந்து திருச்சிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:சினிமா தியேட்டருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது