தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

10 பைசா பிரியாணி: கூட்டம் கூட்டமாக நின்ற பிரியாணி பிரியர்கள் - உலக பிரியாணி தினம்

உலக பிரியாணி தினத்தை முன்னிட்டு திருச்சி மக்களுக்கு மெகா ஆஃபர் கிடைத்துள்ளது. பையும் கையுமாக 10 பைசாவோடு வரிசையில் நின்றவர்கள் வயிறு நிறைய சாப்பிட்டு ஏப்பம் விட்டார்களாம்.

10 பைசாவிற்கு பிரியாணி: பையும் கையுமாக களை கட்டிய பிரியர்கள்
10 பைசாவிற்கு பிரியாணி: பையும் கையுமாக களை கட்டிய பிரியர்கள்

By

Published : Oct 11, 2020, 2:46 PM IST

நினைவுக்கு வந்தாலே நாவெல்லாம் எச்சில் சொட்டும் உணவு பிரியாணி. அசைவ பிரியர்கள் வெளுத்துக் கட்டிய இந்த உணவு நாளடைவில் காளாண் பிரியாணி, காய்கறி பிரியாணி என்று சைவத்திலும் இடம்பெற்றிருப்பதே பிரியாணி சுவையின் தரத்திற்கு சான்று என்று சொல்லலாம். அதுவும் இன்று உலக பிரியாணி தினமாம்.

இந்த தினத்தை முன்னிட்டு திருச்சி தில்லைநகரில் உள்ள ஹக்கீம் பிரியாணி கடையில் 10 பைசாவிற்கு மட்டன் பிரியாணி வழங்கப்பட்டது. இதை வாங்குதற்காக தனிநபர் இடைவெளியுடன் நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்தனர். சுமார் 200 பேருக்கு மேல் கையில் 10 பைசாவுடன் கடையின் முன்பு கூடியதால் தகவலறிந்த காவல்துறையினரும் விரைந்து வந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.

திருச்சியில் 10 பைசாவிற்கு பிரியாணி விற்பனை - களை கட்டிய பிரியர்கள்

அதே போல் இதே கடையின் மற்றொரு கிளையில் கரோனோ தடுப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்களுக்கு 1 ரூபாய்க்கு பிரியாணி வழங்கப்பட்டது. தங்களது அடையாள அட்டையை காட்டி நேற்றே இதற்கான டோக்கன்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

உணவகங்களில் குறைந்தது 120 ரூபாய்க்கு மேல் விற்கப்படும் பிரியாணி, வெறும் 10 பைசாவிற்கு விற்கப்பட்டதால் பொதுமக்களுக்கு இது மெகா ஆஃபர் ஆனது. எதற்காக இந்த 10 பைசாவை பாதுகாக்கிறோம் என்று தெரியாமலே காலம் கடந்து பாதுகாத்தவர்களுக்கோ இந்த ஆஃபர் சுவைமிகுந்த ஒன்று.

இதையும் படிங்க: பிரியாணி சாப்பிட ஆசை...! கரோனா வைத்தது பூசை...!

ABOUT THE AUTHOR

...view details