திருச்சி மாவட்டம் வாத்தலை காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட சில இருசக்கர வாகனங்கள் மாயமானது.
இதுதொடர்பான புகார் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு தெரியவந்தது. இந்நிலையில் வாத்தலை காவல் நிலைய ஆய்வாளர் மணிவண்ணன், உதவி ஆய்வாளர் செல்லப்பா ஆகியோரை ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.