தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாரதியார் சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு - trichy head post office

திருச்சி: தலைமை அஞ்சலக அஞ்சல்தலை சேகரிப்பு நிலையத்தில் மகாகவி பாராதியாரின் 137வது பிறந்ததின சிறப்பு அஞ்சல் உறை வெளியீட்டு விழா நடைபெற்றது.

New Post cover
Bharathiyar Post Cover Release

By

Published : Dec 12, 2019, 12:49 PM IST

திருச்சி தலைமை அஞ்சலக அஞ்சல்தலை சேகரிப்பு நிலையத்தில் மகாகவி பாராதியாரின் 137வது பிறந்ததின சிறப்பு அஞ்சல் உறை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் திருச்சி அஞ்சல் கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் கணபதி, தேசியக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் மாணிக்கம் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.

விழாவில் முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் கணபதி பேசுகையில் ”சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி டிசம்பர் 11, 1882ஆம் ஆண்டு பிறந்தார் கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். பாரதி தமிழ் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலம் மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர்” என்றார்.

முன்னதாக அஞ்சல் தலை சேகரிப்பு நிலைய பொறுப்பாளர் ராஜேஷ் வரவேற்றார். ராக்போர்ட் அஞ்சல்தலை ஆராய்ச்சி மைய நிறுவனர் ஷர்மா நன்றி கூறினார். அஞ்சல்தலை சேகரிப்பாளர்கள் ரகுபதி, லால்குடி விஜயகுமார், மதன், யோகா ஆசிரியர் விஜயகுமார், நாசர், தாமோதரன், ராஜேந்திரன் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க: 'கிறிஸ்துவும் சரி கிருஷ்ணனும் சரி இங்குதான் பிறக்கிறார்கள்'

ABOUT THE AUTHOR

...view details