தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சி; தாலிக்கு தங்கம் வாங்க 8 மணி நேரம் காத்திருந்த பெண்கள்! - தாலிக்கு தங்கம் வாங்க 8 மணி நேரம் காத்திருந்த பெண்கள்...

திருச்சியில் தாலிக்கு தங்கம் வாங்க பயனாளிகள் 8 மணி நேரம் காத்திருந்தனர்.

தாலிக்கு தங்கம் வாங்க காத்திருந்த பெண்கள்
தாலிக்கு தங்கம் வாங்க காத்திருந்த பெண்கள்

By

Published : Jan 8, 2022, 7:33 AM IST

திருச்சி: மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி திட்டத்தின் மூலம் பெண்களுக்குத் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

அதன்படி துறையூர் மற்றும் உப்பிலியபுரம் பகுதிகளில் உள்ள சுமார் 52 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்குத் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி அந்தந்த யூனியன் அலுவலகத்தில் நேற்று (ஜன. 7) நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

தாலிக்கு தங்கம் வாங்க காத்திருந்த பெண்கள்

இதனையடுத்து, மதியம் சுமார் 12 மணி முதலே பயனாளிகளான 63 பெண்கள் துறையூர் யூனியன் அலுவலகத்திற்கு வரத்தொடங்கினர்.

இந்தப் பயனாளிகளில் பெரும்பாலும் கைக்குழந்தைகளுடனும் இருந்தனர். இரவு 8-30 மணியளவில் துறையூர் யூனியனுக்கு வந்த மாவட்ட சமூக நல அலுவலர் (பொறுப்பு) புவனேஸ்வரி வந்தவுடன் நிகழ்ச்சி தொடங்கியது.

தாலிக்கு தங்கம் வாங்க காத்திருந்த பெண்கள்

சட்டப்பேரவை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு துறையூர் திரும்பிய எம்எல்ஏ ஸ்டாலின்குமார் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இரவு நேரத்தில் கைக்குழந்தைகளுடன் ஒரு சில பயனாளிகளைக் கண்ட எம்எல்ஏ ஸ்டாலின் குமார் சுமார் 8 மணி நேரம் வரை காக்க வைத்த அலுவலர்களை கடிந்து கொண்டார்.

தாலிக்கு தங்கம் வாங்க காத்திருந்த பெண்கள்

சுமார் 83 பயனாளிகளில் 67 பயனாளிகளுக்கு மட்டும் தங்கம் வழங்கப்பட்டது. பட்டியலில் பெயர் இருந்தும் மீதமுள்ள சிலருக்குத் தங்கம் மறுநாள் பெற்றுக் கொள்ளுமாறு அலுவலர்கள் கூறியதால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இதேபோல் உப்பிலியபுரம் யூனியனில் 132 பயனாளிகளுக்குத் தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டது. துறையூர் யூனியனில் சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாகக் கைக்குழந்தைகளுடன் காத்திருந்த பெண்களுக்கு அலுவலர்கள் குடிக்கத் தண்ணீர் கூட தரப்படவில்லை, எனவும் மதியம் சாப்பாடும் ஏற்பாடு செய்து தரவில்லை எனவும் பயனாளிகள் புகார் தெரிவித்தனர்.

இரவு நேரத்தில் காலதாமதமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பயனாளிகள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்புவதற்கு ஒரு சிலருக்குப் பேருந்து இல்லாததால் குளிர் நேரத்தில் பெரும் அவதிக்குள்ளாகினர்.

தாலிக்கு தங்கம் வாங்க 8 மணி நேரம் காத்திருந்த பெண்கள்

மேலும் 2 யூனியனிலும் கரோனா தொற்று அதிகரித்து வரும் வேளையில் தங்கத்தைப் பெற வந்த பயனாளிகளை ஒரே அறையில் சிறிதும் தகுந்த இடைவெளியில்லாமல், பெரும்பாலானோர் முகக்கவசம் இன்றி அமர்ந்திருந்தது அனைவருக்கும் ஒரு வித அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: நடிகை குஷ்பு உள்பட 153 பாஜகவினர் மீது வழக்குப்பதிவு

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details