கரோனா வைரஸ் பரவல் காரணமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. அதன் காரணமாக நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக தமிழ்நாடு முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணியை அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுவருகிறது.
பெல் நிறுவனத்தின் 'அதிநவீன இயந்திரம்' மூலம் கிருமி நாசினி தெளித்த அமைச்சர் - corona in tamilnadu
திருச்சி: பாரத மிகுமின் நிறுவனம் (பெல்) தயாரித்த அதிநவீன இயந்திரம் மூலம் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கிருமி நாசினி தெளிக்கும் பணியை மேற்கொண்டார்.
![பெல் நிறுவனத்தின் 'அதிநவீன இயந்திரம்' மூலம் கிருமி நாசினி தெளித்த அமைச்சர் -trichy](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6840930-thumbnail-3x2-l.jpg)
அதைத்தொடர்ந்து திருச்சியில் பாரத மிகுமின் நிறுவனம் (பெல்) சார்பில் கிருமிநாசினி தெளிக்க பிரத்யேகமாக இயந்திரம் ஒன்று தயாரிக்கப்பட்டது. அந்த எந்திரத்தின் மூலம் கிருமி நாசினியை உயரமான கட்டடங்களிலும் தெளிக்களாம். அதன்படி, திருச்சி பாலக்கரை பகுதியில் கிருமிநாசினி எந்திரத்தை லாரியில் வைத்து அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் சாலையின் இருபுறமும் கிருமி நாசினியை தெளித்தார். அவருடன் மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:திருச்சியில் கரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 43ஆக அதிகரிப்பு!