திருச்சி: உறையூர் பகுதியில் உள்ள ஸ்ரீ குங்குமவல்லி தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் ஆண்டுதோறும் தை மாதம் 3ஆவது வெள்ளிக்கிழமை வளைகாப்பு உற்சவம் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் நிகழாண்டில் குங்குமவல்லி தாயாருக்கு 73ஆவது ஆண்டு வளைகாப்பு திருவிழா நேற்று (பிப்.3) நடைபெற்றது.
இதை முன்னிட்டு நேற்று காலை கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் நடைபெற வேண்டி ஹோம பூஜை நடைபெற்றது. தொடர்ந்து 10 மணி அளவில் அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர மாலை 4 மணி அளவில் வளைகாப்பு சம்பிரதாய பூஜைகள் தொடங்கின. மாலை 4.30 மணிக்கு குங்குமவல்லி தாயாருக்கு அர்ச்சிக்கப்பட்ட வளையல், குங்குமம், அம்பாள் படம் பிரசாதமாக வழங்கப்பட்டது.