தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சியில் வெளியான பாபா திரைப்படம் - ரஜினி ரசிகர்கள் ஆரவாரம் - to the beat of drums

திருச்சியில் ரஜினியின் பாபா ரிரீலிஸ் ஆனதையடுத்து ரஜினி ரசிகர்கள் மேளம் தாளத்துடன் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

Etv Bharatதிருச்சியில் வெளியான பாபா திரைப்படம்  - ரஜினி ரசிகர்கள் ஆரவாரம்
Etv Bharatதிருச்சியில் வெளியான பாபா திரைப்படம் - ரஜினி ரசிகர்கள் ஆரவாரம்

By

Published : Dec 10, 2022, 1:07 PM IST

திருச்சி: மேளதாளம் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் பாபா திரைப்படத்தை ரஜினி ரசிகர்கள் வரவேற்றனர். சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பாபா திரைப்படம் கடந்த 2002ஆம் ஆண்டு திரையரங்கில் ரிலீஸ் ஆனது. தற்போது மீண்டும் அந்த திரைப்படும் நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இன்று(டிச.10) மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டது.

அந்த திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு இன்று படத்தைக் கொண்டாடும் வகையில் ரஜினி ரசிகர்கள் படப்பெட்டி வடிவிலான பெட்டியை எடுத்து வந்து மேளதாளம் முழங்க, ஆடிப்பாடி நடனமாடி திரையரங்குக்கு ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து அங்கு படத்தை வரவேற்கும் வகையில் வெடி வெடித்து கொண்டாடினர். 20 வருடங்களுக்குப் பிறகு வெளிவந்தாலும் மீண்டும் முதல்முறை வெளியாவது போன்று உணர்வதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.

திருச்சியில் வெளியான பாபா திரைப்படம் - ரஜினி ரசிகர்கள் ஆரவாரம்

இதையும் படிங்க:திரையரங்கில் வெளியான 'சில்லா சில்லா' பாடல்; ரசிகர்கள் கொண்டாட்டம்

ABOUT THE AUTHOR

...view details