தமிழ்நாட்டில் ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர்கள், மாவட்ட கவுன்சிலர்கள் ஆகியவற்றிற்கான தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 9ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுக்கா அரசலூர் கிராமத்தில் 4ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலில் இரவு நேரத்தில் ஏலம் நடைபெற்றது.
செல்ஃபோனில் வீடியோ எடுத்ததால் ஏற்பட்ட தகராறு இதில் அதிக தொகை கேட்பவருக்கு வார்டு உறுப்பினர் பதவி என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் இரண்டு லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளார். இதை அங்கிருந்தவர்கள் செல்ஃபோனில் வீடியோ எடுத்துள்ளனர்.
இதனால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தொட்டியம் காவல் துறையினர் ஏலத்தில் ஈடுபட்டவர்களை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
இதையும் படிங்க: ஏலத்துக்கு வந்த பதவிகள் - ஊராட்சித் தலைவர் பதவி ரூ.50 லட்சம்; துணைத் தலைவர் பதவி ரூ.15 லட்சம்!