பெரம்பலூர் -திருச்சி சாலையில் வெங்கடேசபுரம் தெருவில் உள்ள IDBI -வங்கியின் ATM -யை உடைக்க முயன்ற திருடனை பொதுமக்கள் அடித்து உதைத்து போலீசிடம் ஒப்படைத்தனர். பெரம்பலூர் - திருச்சி சாலையில் வெங்கடேசபுரம் தெருவில் உள்ள IDBI -வங்கியின் ATM -யை திருடன் ஒருவன் உடைக்க முயன்றுள்ளான். அப்போது இதனைப்பார்த்த ஒருவர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்து அங்கு வந்த ஊர்க்காவல் படையை சேர்ந்த கண்ணன் என்பவர் திருடனை பிடிக்க முயன்றார்.
போலீசாரை தாக்கி ATM-ல் கொள்ளையடிக்க முயற்சி
பெரம்பலூர் -திருச்சி சாலையில் வெங்கடேசபுரம் தெருவில் உள்ள IDBI-வங்கியின் ATM-யை உடைக்க முயன்ற திருடனை பொதுமக்கள் அடித்து உதைத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இந்நிலையில், அந்த திருடன் காவலர் கண்ணனை தலையில் பலமாக அடித்துவிட்டு தப்பி ஓட முயன்றான். அப்போது அங்கு வந்த மற்ற போலீசார் மற்றும் பொதுமக்கள் திருடனை துரத்தி பிடித்து சரமாரியாக தாக்கினர். போலீசார் மற்றும் பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த திருடனை போலீசார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அதே நேரத்தில் திருடன் தாக்கி தலையில் காயமுற்ற ஊர்க்காவல் படையை சேர்ந்த கண்ணன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், ஏடிஎம்மில் உடைத்து கொள்ளை அடிக்க முயற்சி செய்த திருடன் அரசு மருத்துவமனையில் துப்புரவு மற்றும் பாதுகாப்பு பணியாளர்களுக்கு மேற்பார்வையாளராக பணியாற்றுபவர் என்றும் அவர் பெயர் தனுஷ் என்ற திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் பிடிபட்ட திருடனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.