தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டாஸ்மாக் திறப்பை எதிர்த்து திமுக எம்எல்ஏ அன்பில் மகேஷ் ஆர்ப்பாட்டம் - As opposed to the opening of the task MLA Mahesh struggles

திருச்சி: டாஸ்மாக் திறப்பை எதிர்த்து திருச்சியில் திமுக எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் கருப்பு சின்னம் அணிந்து அறப் போராட்டம் நடைபெற்றது.

டாஸ்மாக் திறப்பை எதிர்த்து  திமுக எம்.எல்.ஏ. மகேஷ் போராட்டம்
டாஸ்மாக் திறப்பை எதிர்த்து திமுக எம்.எல்.ஏ. மகேஷ் போராட்டம்

By

Published : May 7, 2020, 8:45 PM IST

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கில், கட்டுப்பாடுகளுடன் சில தளர்வுகளை அமல்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்தது.

அரசின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், தன்னார்வலர்கள், சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி, அக்கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி காந்தி மார்க்கெட் பழைய பால் பண்ணை விஸ்வாஸ் நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டின் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுகவினர் கறுப்பு பேட்ச் அணிந்து கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:ஒரே நாளில் மூன்று காவலர்களுக்கு கரோனா தொற்று!

ABOUT THE AUTHOR

...view details