ஸ்ரீரங்கம், ரங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்த் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் 9ஆம் திருநாளான இன்று(மே.9) ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் உற்சவர் ஸ்ரீநம்பெருமாள் விருப்பன் திருநாள் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு ஸ்ரீ நம்பெருமாளுக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீஆண்டாள் திருக்கோயிலிலிருந்து ஆண்டாள் கிளி மாலை , பட்டு வஸ்திரங்கள் மற்றும் மங்கலப் பொருட்கள் ஸ்ரீரங்கம் கொண்டு வரப்பட்டன.
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீஆண்டாள் திருக்கோயிலிலிருந்து ஸ்ரீ ஆண்டாள் கிளி, மாலை பட்டு வஸ்திரங்கள் மற்றும் மங்கலப் பொருட்களை ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயில் நிர்வாக அலுவலர் இளங்கோவன், தக்கார் ரவிச்சந்திரன் , ரமேஷ் பட்டர் ஆகியோர் கொண்டு வந்தனர். இந்த மங்கலப்பொருட்களை ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து பெற்றுக் கொண்டார்.