தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 22, 2022, 4:30 PM IST

ETV Bharat / state

ஶ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் - திருச்சி மாநகர காவல் ஆணையர்

திருச்சி ஶ்ரீரங்கம் கோயில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும், அதற்காக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது எனவும் திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் கார்த்திகேயன் கூறினார்.

ஶ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு: 2 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பு
ஶ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு: 2 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பு

ஶ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் - திருச்சி மாநகர காவல் ஆணையர் பேட்டி

திருச்சி: வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோயில் உள்பிரகாரத்தில் சிசிடிவி கேமராக்களுடன் கூடிய புறக்காவல் நிலையத்தை திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் இன்று திறந்து வைத்து, சிசிடிவி செயல்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்று இருந்தனர்.

செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், "வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பகல் பத்து, இராப்பத்து நிகழ்வு மட்டுமன்றி சொர்க்கவாசல் திறப்பின்போதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வைகுண்ட ஏகாதசியின்போது மூவாயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள்.

சிசிடிவி கேமராக்கள் உட்பட 92 கேமராக்கள் கூடுதலாக நிறுவப்பட்டு மொத்தம் 210 கேமராக்கள் பொருத்தப்பட்டு, கட்டுப்பாட்டு அறையில் இருந்து திருக்கோயில் கண்காணிக்கப்பட உள்ளது. கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு போலீசாரின் உதவியுடன் கண்காணித்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளாக கரோனா இருந்ததால் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு முழு மக்கள் தொகை அனுமதிக்கப்பட உள்ளனர்.

அதனால், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்படவுள்ளனர். போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் விழா நாட்களில் காவிரி பாலத்தில் மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் அதிக அளவு போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது. சொர்க்கவாசல் திறப்பின் போது 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்’ என திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பலாப்பழங்களை குறிவைத்து குன்னூரில் உலா வரும் காட்டு யானைகள்!

ABOUT THE AUTHOR

...view details