தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கார்கில் போர்: மேஜர் சரவணன் நினைவுத்தூணுக்கு முப்படையினர் மரியாதை! - kargil vijay diwas saravanan

திருச்சி: கார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு மேஜர் சரவணன் நினைவுத்தூணுக்கு முப்படையினர் மரியாதை செலுத்தினர்.

மேஜர் சரவணன் நினைவு சின்னத்தில் முப்படையினர் வீரவணக்கம்
மேஜர் சரவணன் நினைவு சின்னத்தில் முப்படையினர் வீரவணக்கம்

By

Published : Jul 26, 2020, 7:21 PM IST

கார்கில் போர் வெற்றி தினம் இன்று (ஜூலை 26) கொண்டாடப்படுகிறது. கார்கில் போர் 1999ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி தொடங்கி ஜூலை 26ஆம் தேதி வரை நடைபெற்றது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையைத் தாண்டி நுழைய முயன்றதால் இந்தப் போர் நடைபெற்றது.

அதில் இந்திய ராணுவம் வெற்றிபெற்றது. அதனால் ஜூலை 26ஆம் தேதி கார்கில் போர் வெற்றி தினமாகக் கொண்டாப்படுகிறது. அப்போரின்போது மே 29ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு ஜுபர் மலைப்பகுதியில் பதுங்கியிருந்த எதிரிகள் மீது இந்திய ராணுவத்தில் பணியாற்றிய திருச்சியைச் சேர்ந்த மேஜர் சரவணன் தலைமையிலான குழுவினர் தாக்குதல் நடத்தினர்.

அதில், எதிரிகள் 2 பேர் கொல்லப்பட்டனர். அவர்கள் நடத்திய எதிர் தாக்குதலில் சரவணன் வீரமரணம் அடைந்தார். அதனால் சரவணனுக்கு இந்திய அரசு பட்டாலிக் நாயகன், வீர் சக்ரா விருதுகள் அளித்து கௌரவப்படுத்தியது. தொடர்ந்து 2007ஆம் ஆண்டு திருச்சியில் வெஸ்ட்ரி பள்ளி அருகே உள்ள ரவுண்டானாவில் சரவணனுக்கு நினைவுத்தூண் எழுப்பப்பட்டது.

மேஜர் சரவணன் நினைவு சின்னத்தில் முப்படையினர் வீரவணக்கம்

அதில் நான்கு தூண்களுடன் அசோகச் சின்னம், ராணுவப் படை முத்திரை, சரவணன் பணிபுரிந்த பிகார் படைப்பிரிவு முத்திரை ஆகியவை இடம்பெற்றுள்ளன. அதனால் ஆண்டுதோறும் கார்கில் வெற்றி தினத்தன்று ராணுவத்தினர் அங்கு சென்று அவருக்கு மரியாதை செலுத்துவார்கள்.

அந்த வகையில் இன்று முப்படைகளைச் சேர்ந்த ராணுவ அலுவலர்கள் அவரது நினைவுத்தூணில் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர்.

இதையும் படிங்க:கார்கில் வெற்றியைக் கொண்டாடும் இந்திய ராணுவம்!

ABOUT THE AUTHOR

...view details