அந்த மனுவில், 'அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் அதிக தேர்ச்சிபெற உள்கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்த வேண்டும். பள்ளியின் தரம் உயர்த்தப்பட வேண்டும். அரசுப் பள்ளிகளில் சேர்க்கை இல்லை எனக் கூறி தனியார் பள்ளிகளை நாடுவதை கைவிட வேண்டும்.
கேரளாவில் அரசுப் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு ஒரு வாரத்தில் மட்டும் 30 ஆயிரம் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். அதேபோல் ஒரு சூழ்நிலையை தமிழ்நாட்டிலும் ஏற்படுத்தி அரசுப் பள்ளிகளை பாதுகாக்க வேண்டும்.
தனியார் பள்ளிகளில் கட்டணக் கொள்ளை அதிகரித்துள்ளது. கட்டண விவரம் அறிவதற்கான வெப்சைட்டும் இயங்கவில்லை. அது கண்காணிக்கப்பட வேண்டும். தனியார் பள்ளி அறிவிப்புப் பலகையில் கட்டண தொகையை வெளியிட வேண்டும்.
அரசு பள்ளிகளை தரம் உயர்த்த கோரி ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மனு அதேபோல் அரசு அறிவித்துள்ள 25 விழுக்காடு ஏழை எளிய மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை தனியார் பள்ளிகளில் அமல்படுத்த வேண்டும். விதிகளை மீறி செயல்படும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என குறிப்பிட்டுள்ளனர்.