தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா நிவாரண நிதி: ரூ.50 லட்சம் வழங்கிய அறம் மக்கள் நல சங்கம்! - aram makkal nala sangam trichy

திருச்சி: கரோனா நிவராண நிதிக்கு அறம் மக்கள் நல சங்கம் சார்பில் ரூ.50 லட்சத்துக்கான காசோலை திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது.

திருச்சி
திருச்சி

By

Published : Apr 9, 2020, 3:53 PM IST

கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலையை சரி செய்வதற்கு கரோனா நிவாரண நிதியாக நன்கொடை வழங்குமாறு பிரதமர் நரேந்திர மோடியும், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

அந்த வகையில், திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு நன்கொடை கோரி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து, பலரும் அரிசி, மளிகை பொருள்கள், கட்டில் உள்ளிட்ட பொருட்களை நன்கொடையாக வழங்குவது மட்டுமின்றி பணமாகவும் நிதி வழங்குகின்றனர்.

ரூ.50 லட்சம் வழங்கிய அறம் மக்கள் நல சங்கம்

இந்நிலையில், இன்று திருச்சி அறம் மக்கள் சங்கம் நலச்சங்கம் சார்பில் 50 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது. இதற்கான காசோலையை சங்கத்தின் தலைவர் ராஜா, பொதுச்செயலாளர் ரமேஷ் குமார் ஆகியோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து நேரில் வழங்கினர்.

இதையும் படிங்க:அகமதாபாத்திலிருந்து சென்னை வந்தவருக்கு கரோனா!

ABOUT THE AUTHOR

...view details