தமிழ்நாடு

tamil nadu

”அடேங்கப்பா” மலைக்கவைத்த மாவட்ட தொழில் மைய லஞ்சம்.....

By

Published : May 18, 2022, 9:58 AM IST

திருச்சி மாவட்ட தொழில் மையத்திலும், மேனேஜர் வீட்டிலும், நேற்று முன்தினம் முதல் அதிரடி சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார், 9 லட்சம் ரூபாய் ரொக்கம், மற்றும் 3 லாக்கர் சாவிகளை கைப்பற்றினர். லாக்கர்களை திறந்து சோதனை நடத்தியதில், மொத்தம் 160 பவுன் நகைகள், 1,250 கிராம் வெள்ளி பொருட்கள், 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிரந்தர வைப்பு மற்றும் 15 லட்சம் இருப்புக்கான ஆவணங்கள், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டு அபார்ட்மெண்டுகளுக்கான ஆவணங்களை கைபற்றியுள்ளனர்.

”அடேங்கப்பா” மலைக்கவைத்த மாவட்ட தொழில் மைய லஞ்சம்
”அடேங்கப்பா” மலைக்கவைத்த மாவட்ட தொழில் மைய லஞ்சம்

திருச்சி,தொழில் முனைவோர், தொழில் தொடங்குவதற்கு வங்கிகளில் மானியத்துடன் கடன்பெற ஒப்புதல் அளிக்கும் திருச்சி மாவட்ட தொழில் மையத்தில், திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்க, அலுவலர்கள் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் சென்றது.நேற்று மாலை, டி.எஸ்.பி., மணிகண்டன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார், மாவட்ட தொழில்மைய அலுவலகத்தில், திடீர் சோதனை நடத்தினர்.

இரண்டு மணி நேரம் நடந்த அதிரடி சோதனையில், தொழில் மைய மேனேஜர் ரவீந்திரன் அறையில் இருந்தும், கம்ப்யூட்டர் இன்ஜினியர் கம்பன் ஆகியோரிடம் இருந்தும், கணக்கில் வராத, 3 லட்சம் ரூபாயை, போலீசார் கைப்பற்றினர்.தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு முதல் திருச்சி, உறையூரில் உள்ள ரவீந்திரன் வீட்டிலும், திருவெறும்பூரில் உள்ள கம்பன் வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினர்.நேற்று இரவு வரை கிட்டத்தட்ட 24 மணிநேரம் சோதனை நடத்தினர். இதில், 6 லட்சம் ரூபாய் ரொக்கம், முதலீட்டு ஆவணங்கள் மற்றும் 3 லாக்கர் சாவிகளையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து, மூன்று லாக்கர்களையும் திறந்து சோதனை நடத்தியதில் மொத்தம் 160 பவுன் நகைகள், 1,250 கிராம் வெள்ளி பொருட்கள், 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிரந்தர வைப்பு மற்றும் 15 லட்சம் இருப்புக்கான ஆவணங்கள், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டு அபார்ட்மெண்டுகளுக்கான ஆவணங்களை கைபற்றியுள்ளனர்.

இதையும் படிங்க:கார்த்தி சிதம்பரம் வீட்டில் சிபிஐ திடீர் சோதனை - பின்னணி என்ன ?

ABOUT THE AUTHOR

...view details