திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே உள்ள பேரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 21). அதே பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் வெங்கட், கோபி.
ஆற்றில் இருந்து, மாட்டு வண்டிகள் மூலம் திருட்டு மணல் அள்ளுவது தொடர்பாக ரஞ்சித்திற்கும் இந்தச் சகோதரர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்துவந்தது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு வெங்கட், கோபி ஆகியோரது தாயாரை ரஞ்சித் திட்டியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சகோதரர்கள் இருவரும் மது அருந்திவிட்டுச் சென்று, போதையில் ரஞ்சித்திடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து தகராறு முற்றியதில் சகோதரர்கள் இருவரும் ரஞ்சித்தை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரஞ்சித் உயிரிழந்துள்ளார்.