திருச்சி:லால்குடி அருகே நன்னிமங்கலம் கிராமத்தில் உள்ள அக்ரஹாரம் தெருவில் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான இடம் உள்ளது. அந்த இடத்தில் இன்று (பிப். 27) புதிய போர்வெல் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, ஆழ்துளைக் கிணற்றில் ஏதோ சிக்குவது போல் தொழிலாளர்கள் உணர்ந்தனர்.
இதையடுத்து, ஆழ்துளைக் கிணற்றிலிருந்ததை வெளியே எடுத்துப் பார்த்த போது, அரை அடி உயரம் கொண்ட பழங்கால ஐம்பொன் அம்மன் சிலை எனத் தெரியவந்தது. இதையறிந்த பொதுமக்கள் அனைவரும் சென்று கண்டெடுக்கப்பட்ட அம்மன் சிலையை ஆர்வத்துடன் பார்த்தனர். பின்னர் இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.