திருச்சி:தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி கடந்த 28ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் (பிப்.4) வரை நடைபெற்றது.
பின்னர் நேற்று (பிப்.5) வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வேட்பாளர்கள் உறுதி செய்யப்பட்டனர். நாளைய தினமே (பிப். 7) வேட்புமனுக்களைத் திரும்ப பெற கடைசி நாளாகும்.
தேர்தல் முடிவுற்ற பின்னர் பிப்ரவரி 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தலில் போட்டியிடும் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.