கரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கினால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு சார்பிலும், தன்னார்வலர்களும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில், திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், திருச்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.
இலங்கை தமிழர்களுக்கு நிவாரணம் வழங்கிய அன்பில் மகேஷ் எம்எல்ஏ - இலங்கை தமிழர்களுக்கு நிவாரணம்
சென்னை: கரோனா வைரஸ் ஊரடங்கால் அவதிப்பட்டு வரும் இலங்கை தமிழர்களுக்கு திமுக எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிவாரண உதவிகளை வழங்கினார்.

anbil mahesh
அந்த வகையில், இலங்கை தமிழர்களுக்கு நிவாரண பொருள்களை அன்பில் மகேஷ் எம்எல்ஏ வழங்கினார். திருச்சி தெற்கு மாவட்டம், சுப்பிரமணியபுரம் அருகே அமைந்திருக்கும் கொட்டப்பட்டு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் கரோனாவால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்களுக்கு தேவையான அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் அடங்கிய பைகளை அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். இந்நிகழ்வில் பகுதி செயலாளர் பாலமுருகன், வண்ணை அரங்கநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.