ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வையம்பட்டி அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் உயிரிழப்பு - The police registered a case and investigated

வையம்பட்டி அருகே எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து மின் கம்பத்திலேயே எலக்ட்ரீசியன் ஒருவர் உயிரிழந்தார்.

வையம்பட்டி அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் ஒருவர் உயிரிழப்பு
வையம்பட்டி அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் ஒருவர் உயிரிழப்பு
author img

By

Published : Oct 12, 2022, 10:31 PM IST

திருச்சி:வையம்பட்டி அடுத்த பெரியவெள்ளபட்டியைச் சேர்ந்த சங்கர் மகன் சின்னதுரை(41) எலக்ட்ரீசனாக வேலை பார்த்து வந்துள்ளார்.இவர் நேற்று அதே பகுதியைச் சேர்ந்த ராமன் என்பவரின் புதிய வீட்டிற்கு மின் இணைப்பு கொடுப்பதற்காக அருகிலிருந்த மின்கம்பத்தில் ஏறியுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து மின் கம்பத்திலேயே சின்னதுரை பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்ப இடத்திற்கு சென்ற வையம்பட்டி காவல்துறையினர் சின்னதுரையின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து அவர்கள் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் மின்கம்பத்தில் சின்னத்திரை ஏறுவதற்கு முன் அருகில் இருந்த மின்மாற்றியில் மின் இணைப்பை துண்டித்துள்ளார். ஆனால் அந்த மின்கம்பத்திற்கு மற்றொரு மின்மாற்றில் இருந்து மின்சாரம் வந்து கொண்டிருந்த நிலையில் அதை கவனிக்காமல் மரத்தில் ஏறியதால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தெரியவந்தது.

இந்நிலையில் இன்று(அக்.12) அவரது உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இது குறித்து வையம்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:தும்காவில் 15 வயது பழங்குடியின சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு - போலீஸ் விசாரணை!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details