தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கார் - பைக் மோதல்.. சாலையில் பற்றி எரிந்த எலக்ட்ரிக் பைக்! - மணப்பாறை

திருச்சியில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் எலக்ட்ரிக் பைக் ஒன்று பற்றி எரிந்தது.

சாலையில் பற்றி எரிந்த எலக்ட்ரிக் பைக்
சாலையில் பற்றி எரிந்த எலக்ட்ரிக் பைக்

By

Published : Nov 15, 2022, 4:16 PM IST

திருச்சி: மணப்பாறை அடுத்த திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வ.கைகாட்டி பேருந்து நிறுத்தத்தில், இருசக்கர வாகனங்களில் வந்த சிலர் மழைக்காக ஒதுங்கி உள்ளனர். அப்போது அவ்வழியே மதுரை நோக்கி சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அவர்களின் இருசக்கர வாகனங்களின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் 2 இருசக்கர வாகனங்கள் நொறுங்கிய நிலையில், பேட்டரியில் இயங்கும் இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதைக் கண்டு பதறிய அக்கம்பக்கத்தினர், உடனடியாக பற்றி இருந்த வாகனத்தின் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

மேலும், திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு தங்களது சொத்த ஊரான மதுரைக்கு திரும்பிய போது, சாலையில் தேங்கி இருந்த சகதி மற்றும் மழைநீர் கார் கண்ணாடியில் விழுந்ததால் ஓட்டுனருக்கு சாலை சரிவர தெரியாததால், இந்த விபத்து நிகழந்ததாக கூறப்படுகிறது.

சாலையில் பற்றி எரிந்த எலக்ட்ரிக் பைக்

இந்நிலையில் விபத்தில் காயம் அடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் பத்திரமாக மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற வளநாடு காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க:தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு...? சென்னையில் 4 இடங்களில் சோதனை...

ABOUT THE AUTHOR

...view details