திருச்சி மாவட்டம் முசிறி கைகாட்டி பகுதியில் பெரம்பலூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சிவபதியை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பரப்புரை செய்தார். அப்போது 108 ஆம்புலன்ஸ் அவ்வழியாக வந்தது.
எடப்பாடி பழனிசாமியின் பரப்புரை காரணமாக சாலை முழுவதும் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் ஆம்புலன்ஸ் செல்ல முடியாமல் நெரிசலில் சிக்கித் தவித்தது.
இதனை அறிந்த எடப்பாடி பழனிசாமி தனது பேச்சை நிறுத்திவிட்டு ஆம்புலன்சுக்கு வழி விடுமாறு கூட்டத்தினரை கேட்டுக்கொண்டார். இதைத் தொடர்ந்து காவல் துறையினர் தலையிட்டு கூட்டத்தைக் கலையச் செய்து ஆம்புலன்சுக்கு வழிவிட்டனர்.
இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதன் பின்னர் முதலமைச்சர் பழனிசாமி தொடர்ந்து பேசினார். இந்தப் பரப்புரையில் அதிமுக வேட்பாளர் சிவபதி, அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, புறநகர் மாவட்டச் செயலாளர் ரத்தினவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதைத்தொடர்ந்து திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் துறையூர் ஆகிய பகுதிகளில் அதிமுக வேட்பாளர் சிவபதியை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி