திருச்சி:இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் மற்றும் தேசிய மாநாடு பிரச்சார தொடக்க விழா மாவட்ட தலைவர் MAM.நிஜாம் தலைமையில் மரக்கடையில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிகள், பிரைமரி நிர்வாகிகள், இளைஞர் அணி, மகளிரணி, மாணவரணி, தொழிலாளர் அணி மற்றும் KMCC நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட துணைச் செயலாளர் ஹாபிழ். அல்லாபக்ஷ் கிராத் ஓத, துணைத் தலைவர் முப்தி உமர் பாரூக் ஹஜ்ரத் வரவேற்புரையாற்றினார். மாவட்ட பொருளாளர் ஹூமாயூன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சுதந்திர கிசான் சங்க தேசிய பொருளாளர் பாரூக் மற்றும் வடக்கு மாவட்ட தலைவர் அப்துல் வஹாப் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ஹபீபுர் ரஹ்மான் கருத்துரை வழங்கி,தேசிய மாநாட்டிற்கான பணிக் குழுவையும் அறிவிப்பு செய்தார். மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மகபூப் சாஹிப் மற்றும் மாநில ஊடக அணி துணை ஒருங்கிணைப்பாளர் கோம்பை.நிஜாமுதீன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். நிறைவாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்கள் கலந்துகொண்டு நிறைவுறையாற்றினார்.
2024-ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் -கிற்கு மாநில தலைமை பெற்று தர வேண்டும் எனவும், மார்ச் 10 அன்று சென்னையில் நடைபெற உள்ள தேசிய பவள விழா மாநாட்டிற்கு திருச்சியிலிருந்து ஆயிரக்கணக்கான மக்களை பங்கேற்கச் செய்து வெற்றியடைய உழைப்பு செய்ய வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.