மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து தினமும் இரவு 10.35 மணிக்கு மலிண்டோ விமானம் திருச்சிக்கு வந்து திருச்சியிலிருந்து இரவு 11.25 மணிக்கு மீண்டும் மலேசியாவிற்கு புறப்பட்டுச் செல்லும்.
இந்நிலையில் இந்த விமானம் கோலாலம்பூருக்கு புறப்பட தயாராக இருந்த போது, அதில் ஏற இருந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அலுவலர்கள் சோதனை செய்தனர்.
அப்போது சென்னையைச் சேர்ந்த பாதர் ரேஷ்மி(43), தாசினாபேகம்(34) ஆகிய இரு பயணிகளின் உடமைகளையும் சோதனை செய்தபோது வெளிநாட்டிற்கு கடத்த இருந்த 8.26 லட்சம் மதிப்புள்ள இந்திய ரூபாயும், 13.30 லட்சம் மதிப்புள்ள மலேசியன் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: விமான நிலைய சோதனையில் சிக்கிய 7 பேர் - 2.5 கிலோ தங்கம் பறிமுதல்!