துபாயிலிருந்து திருச்சிக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்தவர்களை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
விமான நிலையத்தில் ரூ.54 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்! - வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை
திருச்சி: விமான நிலையத்தில், துபாயிலிருந்து கடத்திவரப்பட்ட ரூ.54 லட்சம் மதிப்புள்ள 1.4 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
விமான நிலையத்தில் 53.83 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்
அப்போது திருவாரூரைச் சேர்ந்த சுலைமான், திருச்சியைச் சேர்ந்த பஷீர் அகமது ஆகியோர் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களிடமிருந்து சுமார் 54 லட்ச ரூபாய் மதிப்புள்ள 1.433 கிலோ எடை கொண்ட 21 தங்கக் கட்டிகள், 1 பிரேஸ்லெட், 5 தங்க வளையல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதைத்தொடர்ந்து உதவி ஆணையர் பண்டாரம் தலையிலான அதிகாரிகள் இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.