தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஏர் இந்தியா: திருச்சி-மும்பைக்கு இனி வாரத்தில் 4 விமானங்கள் இயக்கம்! - திருச்சி - மும்பை இடையே விமான போக்குவரத்து

திருச்சி: திருச்சியில் இருந்து மும்பைக்கு வாரத்தில் இனி 4 விமானங்கள் இயக்கப்படும் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

Trichy airport
திருச்சி விமான நிலையம்

By

Published : Sep 5, 2020, 1:10 PM IST

திருச்சி-மும்பை இடையே ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வாரம் 2 முறை இயக்கப்பட்டு வருகிறது. இந்த சேவை நான்காக உயர்த்தப்படுள்ளதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த புதிய அறிவிப்பின் படி வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி, ஞாயிறு ஆகிய நான்கு நாள்கள் விமான சேவை இயக்கப்பட உள்ளது.

திருச்சி விமான நிலையத்திலிருந்து மாலை 6.20 மணிக்கு புறப்பட்டு இரவு 8.15 மணிக்கு மும்பை சென்றடையும்.

மும்பையிலிருந்து மதியம் 3.35 மணிக்கு புறப்பட்டு மாலை 5.45 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தடையும். இந்த சேவை வரும் 9ம்தேதி முதல்
தொடங்குகிறது என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: செப். 10 முதல் கேரளாவில் மூலிகை பெட்ரோல் உற்பத்தி - ராமர் பிள்ளை அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details