தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனாவை விட எய்ட்ஸ் பெரிய தொற்று நோய் இல்லை - திருச்சி ஆட்சியர் பிரதீப் குமார்

World AIDS Day 2023: உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு எச்.ஐ.வி மற்றும் எயிட்ஸ் நோயினைக் கட்டுப்படுத்த அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட வலியுறுத்தி விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தொடங்கி வைத்தார்.

Awareness Program on HIV and AIDS
எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 1, 2023, 4:13 PM IST

திருச்சியில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி:உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று (டிச.1) நடைபெற்றது.

இதில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு உறுதி மொழியானது ஏற்றுக்கொள்ளப்பட்டது. முன்னதாக "சமூகங்களுடன் சேர்ந்து எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் தொற்றினைக் குறைக்கும் செயலை முன்னெடுப்போம்” என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் முதல் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.

மேலும், திருச்சி மாவட்ட பள்ளி மாணவர்களிடையே நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் பேசுகையில்‌, "ஒரு கால கட்டத்தில் எச்.ஐ.வி நோய் தொற்று, நோயாக பார்க்கப்பட்ட காலம் உண்டு.

ஒரு கிராமத்தில் ஒருவருக்கு எச்.ஐ.வி தொற்று இருந்தால் அந்த கிராமத்தையே தள்ளி வைக்கும் நிலை இருந்தது. அது பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லை. எய்ட்ஸ் நோய் எப்படி பரவுகிறது என்ற நிலை மக்களுக்கு தெரியாமல் இருந்தது.‌ கடந்த 20, 30 ஆண்டுகளாக எய்ட்ஸ் நோய் பற்றிய விபரம் மக்களிடையே கொண்டு செல்லப்பட்டது.

தமிழக அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வந்தது. எய்ட்ஸ் என்பது ஒரு தொற்று நோய் அல்ல என்பதை மக்களுக்கு புரிய வைக்க நீண்ட காலம் தேவைப்பட்டது. இதற்கு அடுத்த கட்டமாக தற்போது பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுவிட்டது. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னம்பிக்கை கொடுக்க வேண்டும்.

அவர்கள் பொருளாதார ரீதியாகவும், துறை ரீதியாகவும் சாதிக்க வேண்டும் என்றால் பொது மக்கள் அவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். கரோனாவை விட எய்ட்ஸ் ஒன்றும் பெரிய தொற்று நோய் இல்லை. இதில் பாதிக்கப்பட்டவர்கள் தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க:ஒரே நேரத்தில் 15க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. பெங்களூரில் பரபரப்பு!

ABOUT THE AUTHOR

...view details