தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 16, 2019, 10:06 PM IST

ETV Bharat / state

அதிமுகவின் துரோகிகள் அழிந்து விட்டார்கள் - வெல்லமண்டி நடராஜன்!

திருச்சி: உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்ப மனுவைப் பெற்று விட்டு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், அதிமுகவின் எதிரிகள் ஒழிந்து விட்டனர், துரோகிகள் அழிந்து போயினர் எனக்கூறியுள்ளர்.

press meet

உள்ளாட்சித் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளில் தேர்தல் ஆணையமும் தமிழ்நாடு அரசும் ஈடுபட்டுவருகின்றன. இதைத்தொடர்ந்து அரசியல் கட்சிகளும் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னேற்பாடுகளைச் செய்யத் தொடங்கிவிட்டன.

அந்த வகையில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளும் தங்களது தொண்டர்களிடமிருந்து உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெற்றுவருகின்றன. மாவட்ட வாரியாக விருப்ப மனு பெறும் நிகழ்வு கடந்த இரு தினங்களாக நடந்துவருகிறது.

அந்த வகையில் அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட பிரிவு சார்பில் காஜாமலை அருகே உள்ள எஸ்.ஆர்.எம். உணவக விடுதியில் விருப்ப மனு பெறப்பட்டது. மாநகர் மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், மாநகர் மாவட்டச் செயலாளர் குமார் ஆகியோர் தலைமையில் மனுக்கள் பெறப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், ' மேயர் பதவிக்கு 13 பெண்கள் உள்பட 27 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர். 65 வார்டுகளில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட 282 பேரும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 66 பேரும், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 12 பேரும், பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கு 20 பேரும் என மொத்தம் 407 பேர் மனு அளித்துள்ளனர். யார் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டாலும், கட்சியினர் ஒற்றுமையுடன் பணியாற்றி நூறு சதவீத வெற்றியை அடைவோம் என்றார்.

அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் செய்தியாளர்கள் சந்திப்பு

தொடர்ந்து பேசிய அவர், கடந்த மக்களவை தேர்தலில் திமுக பொய்யான வாக்குறுதிகளை அளித்து மாய தோற்றத்தை உருவாக்கி வெற்றி பெற்றுவிட்டது. பின்னர் மக்கள் இதைப் புரிந்துகொண்டு இடைத்தேர்தலில் அதிமுகவை வெற்றி பெறச்செய்தனர். வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்வார்கள். தற்போதைய சூழ்நிலையில் அதிமுகவின் எதிரிகள் ஒழிந்து விட்டார்கள், துரோகிகள் அழிந்து விட்டார்கள்' என்றார்.

உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்ப மனு நிகழ்ச்சி: விறுவிறு அதிமுக!

ABOUT THE AUTHOR

...view details