தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எம்ஜிஆர் சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை! - திருச்சியில் அதிமுகவினர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அனிவித்து மரியாதை செலுத்தினர்

திருச்சி: எம்ஜிஆர் நினைவுதினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மரியாதை செலுத்திய அதிமுக
மரியாதை செலுத்திய அதிமுக

By

Published : Dec 24, 2019, 9:19 PM IST

எம்ஜிஆர் 32ஆவது நினைவுதினத்தை முன்னிட்டு அதிமுகவினர் திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதில், ஒரு பகுதியாக திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அமைச்சர் வளர்மதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மரியாதை செலுத்திய அதிமுகவினர்

இதில் மாநில அமைப்புச் செயலாளர் பரஞ்சோதி, மாநகர் மாவட்ட செயலாளர் குமார் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மேலும், திருச்சியில் பல்வேறு இடங்களில் எம்ஜிஆர் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

எம்ஜிஆர் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்திய அதிமுகவினர்

இதேபோல், கன்னியாகுமரியில் சாமிதோப்பு தலைமைப்பதி முன்பு நடைபெற்ற நினைவுதின விழாவில் சிறப்பு விருந்தினராகத் திரைப்பட இயக்குனரும் குமரி கிழக்கு மாவட்ட அதிமுக தேர்தல் பொறுப்பாளருமான பி.சி. அன்பழகன் கலந்துகொண்டு எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு மாலை அனிவித்து மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். இதில், அதிமுக நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: தமிழ்நாடு முழுவதும் எம்ஜிஆர் நினைவுதினம் அனுசரிப்பு!

ABOUT THE AUTHOR

...view details