திருச்சி மாவட்டம், மணப்பாறையில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதற்காக, திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மணப்பாறைக்கு நேற்று (டிச. 28) வந்தார்.
அதிமுக கொடியுடன் சுவரொட்டி:
அப்போது, அவரை வரவேற்று கட்சி நிர்வாகிகள் ஆங்காங்கே சுவரொட்டிகள் ஒட்டியும், சுவர் விளம்பரங்கள் வரைந்தும், ஃபிளெக்ஸ், பேனர் போர்டுகள் வைத்தும் வரவேற்பு அளித்திருந்தனர். இதில், மணப்பாறையைச் சேர்ந்த கட்சிப் பிரமுகர் ஒருவர் அடித்திருந்த சுவரொட்டியில் அதிமுக கொடி இடம் பெற்றிருந்தது.