தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"தலைமைச் செயலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம்" - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலச் சங்கம்‌

Adi Dravidar and Tribal Welfare Association: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதிகளை ஒதுக்கீடு செய்யக் கோரி, தலைமைச் செயலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலச் சங்கம்‌ அறிவித்துள்ளது.

Adi Dravidar and Tribal Welfare Association
தலைமைச் செயலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலச் சங்கம்‌

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 19, 2023, 2:03 PM IST

தலைமைச் செயலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலச் சங்கம்‌

திருச்சி: திருச்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலச் சங்கம் சார்பாக, மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் வீராசாமி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களில் இருக்கக்கூடிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலச் சங்கத்தைச் சார்ந்த ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மாநிலத் தலைவர் வீராசாமி பேசியபோது, “தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறைகளுக்கு மத்திய அரசால் ஒதுக்கப்படும் நிதிகள் அனைத்தும் முறையாக வழங்கப்படவில்லை.

மேலும், ஆதிதிராவிடர் துறைகளுக்கு ஒதுக்கப்படும் நிதிகளை மாநில அரசு பொதுப்பணித்துறை, நகராட்சி துறை, உள்ளாட்சித் துறை, ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டு, திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலச் சங்கம் சார்பாக இருக்கக்கூடிய ஒப்பந்ததாரர்களின் வாழ்வாதாரம் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. இந்த அரசு எதற்காக ஆதிதிராவிடர் நலத்துறை சார்ந்த ஒப்பந்ததாரர்களைப் புறக்கணிக்கிறது என்பது தெரியவில்லை.

ஆகையால், ஆதிதிராவிட நலச் சங்கம் ஒப்பந்ததாரர்களுக்காக ஒதுக்கப்பட்ட இட ஒதுக்கீடு 18 சதவீதம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறைக்கு மட்டுமல்லாமல், அனைத்து துறைகளிலும் இந்த இட ஒதுக்கீட்டை வழங்கி, ஒப்பந்ததாரர்கள் வாழ்வாதாரத்தைக் காக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். அதேபோல், தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள பல்வேறு துறைகளில் இருக்கக்கூடிய உதவி செயற்பொறியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

மேலும், ஆதிதிராவிடர் நலத்துறை சார்ந்த ஒப்பந்ததாரர்கள், ஆதி திராவிட நலத்துறை சார்பாக வழங்கப்படும் சிறிய அளவிலான டெண்டர்களை வைத்து, தங்களுடைய வாழ்வாதாரத்தைச் செயல்படுத்தி வருகிறார்கள். ஆகையால், மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து ஒப்பந்ததாரர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும்" என்ற கோரிக்கையை முன் வைத்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய மாநிலச் செயலாளர் கதிரேசன், "தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையைச் சார்ந்த ஒப்பந்ததாரர்களை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கிறது. கடந்த 50 ஆண்டு காலமாக சிறிய அளவிலான டெண்டர்களை எடுத்து, தங்களது அன்றாட பிழைப்பை நடத்தி வருகிறார்கள். தற்போது மாநில அரசு எடுத்துள்ள முடிவுகளால், ஒட்டுமொத்தமாக வாழ்வாதாரம் இல்லாமல் ஒப்பந்ததாரர்கள் தவித்து வருகிறார்கள்.

ஆகையால், உடனடியாக மத்திய அரசிடம் இருந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு ஒதுக்கப்பட வேண்டிய அனைத்து நிதியும் பெற்று, முறையாக இந்த துறைக்கே முழுமையாக நிதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, எங்களுடைய கோரிக்கையை எடுத்துரைக்க உள்ளோம்.

அதனைத் தொடர்ந்து, எங்கள் கோரிக்கை மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறையைச் சார்ந்த நலச் சங்கங்களில் இருக்கக்கூடிய ஒப்பந்ததாரர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தலைமைச் செயலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்று கூறினார்.

இதையும் படிங்க:அம்ரித் பாரத் திட்டம்; தூத்துக்குடி உள்ளிட்ட 17 ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கப்படும் - ரயில்வே பொது மேலாளர் தகவல்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details