தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீண்டும் ராஜ்கிரன் வீட்டில் பஞ்சாயத்து.! என்ன தான் நடக்கிறது.? - காவல் கண்காணிப்பாளர்

தன்னை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகுகிறார்கள் எனவும், வீட்டில் வேலைகாரியாக தான் இருக்க வேண்டும் என எண்ணுகிறார்கள் என்றும் ராஜ்கிரண் மீது அவரது வளர்ப்பு மகள் குற்றம்சாட்டியுள்ளார்.

actor rajkiran  actor rajkiran step daughter  actor rajkiran step daughter priya  actor rajkiran step daughter issue  trichy news  trichy latest news  வளர்ப்பு மகள்  ராஜ்குமார் மீது குற்றம்சாட்டும் வளர்ப்பு மகள்  ராஜ்குமார்  வளர்ப்பு மகள்  முனீஸ்ராஜா  முசிறி  திருச்சி  காதலித்து திருமணம்  தந்தை  திருமணம்  திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  காவல் கண்காணிப்பாளர்  கத்திஜா ராஜ்கிரண்
ராஜ்குமார் மீது குற்றம்சாட்டும் வளர்ப்பு மகள்

By

Published : Dec 1, 2022, 8:36 PM IST

திருச்சி :தமிழ் திரையுலகில் 1980 காலகட்டங்களில் முக்கிய நாயகர்களில் ஒருவராக வலம் வந்த ராஜ்கிரண், நடிகராக மட்டும் இல்லாமல், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக திகழ்ந்தார். தற்போது இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

கடந்த இருபது வருடங்களுக்கு முன்பு, திருச்சியிலிருந்து கணவரை பிரிந்து தனது மகளுடன் சென்னை வந்த பத்மஜோதி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, அவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். ராஜ்கிரணை திருமணம் செய்துகொண்ட பத்மஜோதி, தனது பெயரை கதீஜா ராஜ்கிரண் என மாற்றிக்கொண்டார். மேலும் தனது மகள் பிரியாவின் பெயரையும், ஜீனத் பிரியா என மாற்றியுள்ளார்.

இந்நிலையில், தாயுடன் ராஜ்கிரண் வீட்டில் வசித்து வந்த பிரியா, சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி சீரியலில் நடித்து வந்த முனீஸ்ராஜை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒருபுறம் இவ்வாறு போகும் போது, மறுபக்கம் இவர்களது திருமணத்திற்க்கு ராஜ்கிரண் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இவர்களது காதலை ஏற்றுக்கொள்ளாததற்க்கு மதப் பிரச்னை தான் காரணம் என சமூக வலைதளங்களில் விவாதங்கள் கிளம்பின. இந்நிலையில், “ஜீனத் பிரியா தனது மகளே இல்லை, அவர் தனது வளர்ப்பு மகள்” என ராஜ்கிரண் முகநூலில் தெரிவித்திருந்தார். மேலும் தனகு நயினார் முஹம்மது என்ற ஒரே மகன் தவிர வேறு பிள்ளைகள் இல்லை எனவும் குறிப்பிட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து முனீஸ்ராஜ் குறித்தும் தவறாக பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், முனீஸ்ராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், தன்னுடைய மனைவியைக்காக தான் புதியதாக தொழில் தொடங்கி கொடுத்திருப்பதாகவும், புது வீடு கட்டிக்கொண்டு வருவதாகவும் அதற்கான கிரகப்பிரவேசம் விரைவில் இருக்கும் என்றும் அதில் ரசிகர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கூறியிருந்தார். இதுவும் சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறியது.

இந்நிலையில், கதீஜா ராஜ்கிரண் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், தனது கணவர் நடிகர் ராஜ்கிரணை அவதூறாக பேசியது மட்டுமல்லாமல், தனது குடும்ப நகையை எடுத்துச் சென்ற பிரியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்தார்.

இதனைத்தொடர்ந்து பிரியா ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், ராஜ்கிரணின் தூண்டுதலில் தனது தாய் புகார் கொடுத்திருப்பதாகவும், அந்த நகைகள் தனது முதல் தந்தை தனக்காக கொடுத்ததாகவும், அந்த நகையை தான் திருப்பி கொடுத்துவிட்டேன் என்றும் கூறியிருந்தார். மேலும் தங்களது திருமணத்திற்கு பிறகு, ஆள் வைத்து இணையதளத்தில் தவரான கமெண்ட்ஸ்கள் போடுவதாகவும், தன்னை டார்ச்சர் செய்வதாகவும் தெரிவித்திருந்தார்.

காதல் திருமணம்

தற்போது பிரியா கணவருடன் திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள தனது தந்தை வீட்டில் வசித்து வருகிறார். இதனால் பிரியா மீது அவர் தாய் அளித்த புகாரை விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று (டிசம்பர் 1) டிஎஸ்பி அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது.

ராஜ்கிரண் முகநூல் பதிவு

முசிறி டிஎஸ்பி யாஸ்மின், இன்ஸ்பெக்டர் காவேரி முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில் நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் ஜனத்பிரியா அவரது கணவர் முனீஸ் ராஜாவுடன் ஆஜராகி விளக்கம் அளித்தார். நடிகர் ராஜ்கிரண் மனைவி பத்மஜோதி என்கிற கத்திஜா ராஜ்கிரண் தரப்பினர் யாரும் ஆஜராகவில்லை. இதனால் விசாரணை மாலை ஒத்தி வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜனத்பிரியா, “என்னை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகுகிறார்கள். நான் அவர்கள் வீட்டில் வேலைகாரியாக தான் இருக்க வேண்டும் என எண்ணுகிறார்கள். அவர்கள் வீட்டில் வேலைக்காரியாக தான் நடத்தினர். தற்போது நான் திருமணம் செய்து விட்டதால் அவர்களுக்கு கஷ்டமாக உள்ளது. ஆகவே எனது மீது புகார் அளித்துள்ளனர். ராஜ்கிரண் நினைத்திருந்தால் இந்த புகார் வருவதை தவிர்த்திருக்கலாம். எங்களது நகைகளை எங்களுக்கு கொடுத்து விட்டு எங்களை நிம்மதியாக வாழ விடுங்கள்” என்று கூறினார்.

மீண்டும் ராஜ்கிரன் வீட்டில் பஞ்சாயத்து

இதையும் படிங்க: வரம்பு மீறி அரசு பணம் செலவு: 2 ஊராட்சி தலைவர்கள் அதிகாரம் பறிப்பு!

ABOUT THE AUTHOR

...view details