தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆங்கில வழிக் கல்வியை அதிகப்படுத்த நடவடிக்கை - அன்பில் மகேஷ் பொய்யாமொழி - ஆங்கிலவழிக் கல்வியை அதிகப்படுத்த நடவடிக்கை - அன்பில் மகேஷ் பொய்யாமொழி

அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளர்.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி
அன்பில் மகேஷ் பொய்யாமொழி

By

Published : Jun 16, 2021, 1:33 PM IST

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் தொடங்கி வைத்தார்.

இதனால் திமுகவினர் உள்ளிட்டப் பல்வேறு தரப்பினரும் தமிழ்நாடு முழுவதும் மரம் நடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட மலைக்கோட்டை பகுதி, திருவெறும்பூர் தொகுதி காட்டூர் பகுதியில் மரக்கன்றுகள் நடும் பணியைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், சட்டப்பேரவை உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 'தனியார் பள்ளிகளில் இருந்து மாறிவரும் மாணவர்களுக்கு அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியை அதிகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: மீண்டும் பேருந்து சேவை?... முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை

ABOUT THE AUTHOR

...view details