திருச்சி: தமிழ்நாட்டை பொறுத்தவரையில் முக்கிய வருவாய் கொடுக்கும் இரண்டு இடங்களில் முக்கியமானவை ஒன்று டாஸ்மாக், மற்றொன்று பத்திரப்பதிவுத்துறை.
பத்திரப்பதிவுத்துறை வரையறைப்படி, ஒரு மாவட்டத்தில், சராசரியாக, 10 முதல், 12 சார் பதிவாளர் அலுவலகங்கள் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால், தற்போதைய நிலவரப்படி, திருச்சி மாவட்டத்தில் 20 சார் பதிவாளர் அலுவலகங்களும், தென் சென்னை, கோவை, தென்காசி, விருதுநகர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் தலா, 17 சார் பதிவாளர் அலுவலகங்களும், செயல்படுகின்றன.
பத்திரப்பதிவு சரியாக நடைபெறவில்லை?
சார்-பதிவாளர் அலுவலகங்களில், ஆண்டுக்கு, கிட்டத்தட்ட நான்கு லட்சம் ஆவணங்கள் பதிவாகின்றன. இதன் மூலம், 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் வருவாய் ஈட்டப்படுகிறது. குறிப்பாக, பெருநகரங்களை ஒட்டியுள்ள ஸ்ரீபெரும்புதூர், ஆவடி, திருப்போரூர், திருக்கழுக்குன்றம், செங்குன்றம் உள்ளிட்ட, 30 சார்-பதிவாளர் அலுவலகங்களில், மிக அதிகபட்சமாக ஆண்டுக்கு, 25 ஆயிரம் ஆவணங்கள் வரை, பதிவு செய்யப்படுகின்றன.
கணணி வழி பத்திரப்பதிவு என்கிறார்கள், ஆனால் பாதி நேரம் சர்வர் சதி செய்கிறது என பத்திரம் பதிய வருபவர்களும், அரசு ஊழியர்களும் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து திருச்சியைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத சார்-பதிவாளர் அலுவலர் கூறுகையில், "நிர்வாக சீரமைப்புக்கான நடவடிக்கைக்கள் எடுக்க அரசு முன்வர வேண்டும். நிர்வாகத்தை மேம்படுத்துவது தொடர்பாக அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் ஒப்புதல் கிடைத்த பிறகே, அடுத்த கட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்" என்றார்.
இதையும் படிங்க:வலிமை அப்டேட்: ரிலீஸுக்கு இரண்டு தேதிகள் ரிசர்வ்