திருச்சி:மணப்பாறை அருகே உள்ள திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வலசுபட்டி எனும் இடத்தில் கீழகோரபட்டியைச் சேர்ந்த அழகர் (58) என்பவர் பெட்ரோல் நிரப்புவதற்காக சாலையின் மறுபுறத்தில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு வாகனத்தை திருப்பியுள்ளார்.
அப்போது, மதுரையில் இருந்து திருச்சி நோக்கி அதிவேகமாக சென்றுகொண்டிருந்த கார் ஒன்று அவர் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.