சிங்கப்பூரிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மீட்பு விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில், வந்த பயணிகளை மத்திய வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் தாலுகா, ஆலத்தூரைச் சேர்ந்த கவுதம் (25) என்ற பயணி தனது உள்ளாடையில் பேஸ்டுடன் கலந்து தங்கத்தை மறைத்து கடத்திவந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, சுங்கத் துறை அலுவலர்கள் பேஸ்டிலிருந்து தங்கத்தை உருக்கிப் பிரித்தெடுத்தனர். அதில், 909 கிராம் தங்கம் இருப்பது தெரியவந்தது. பின்னர் இதனைப் பறிமுதல்செய்த சுங்கத் துறை அலுவலர்கள் கவுதம் மீது வழக்குப்பதிந்து கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். இதன் மதிப்பு ரூ.45.78 லட்சம் என அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:ஆடைக்குள் 154 கிராம்.. சீட்டுக்கடியில் 309 கிராம்.. தங்கம் கடத்தல் குறித்து சுங்கத்துறை விசாரணை