திருச்சி பெரிய மிளகுபாறைப் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று (பிப்ரவரி 27) மாவட்ட ஆட்சியர் சிவராசு போலியோ சொட்டு சிறப்பு முகாமை தொடங்கி வைத்தார். அங்கிருந்து ஆட்சியர் கிளம்பியபோது ஒரு பெண் திடீரென மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்து கதறி அழுதார்.
உடனே அந்தப் பெண்ணின் குறையைத் தெரிவிக்குமாறு, மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். அப்போது ஆட்சியரின் காலில் விழுந்து கதறி அழுதது மணப்பாறையைச் சேர்ந்த ஜெயலட்சுமி என்பது தெரிய வந்தது. உக்ரைனுக்கு படிக்கச் சென்றுள்ள இவரது மகன் ராஜேஷ், குடிநீர், உணவு இன்றி சிக்கித் தவித்து வருவதால் உடனடியாக அவரை மீட்டுத்தரக்கோரி கோரிக்கை விடுத்தார்.