தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சி: பைக் வீலிங் செய்தபடி பட்டாசு வெடித்த இளைஞர்கள்.. வைரல் வீடியோவால் போலீசில் சிக்கியது எப்படி? - Trichy video viral

Trichy: திருச்சியில் இருசக்கர வாகனத்தில் பயணித்த படியே, வாணவெடி உள்ளிட்ட பட்டாசுகளை வெடித்த இளைஞர்கள் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 13, 2023, 5:12 PM IST

Updated : Nov 13, 2023, 5:35 PM IST

திருச்சியில் இருசக்கர வாகனத்தில் பட்டாசுகளை வெடித்தப்படி சாகசம் - வீடியோ வைரல்

திருச்சி:தீபாவளி பண்டிகை நேற்று நவ.12 ஆம் தேதி புத்தாடை உடுத்தி, பட்டாசுகள் வெடித்தும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகை காலத்தில் இது போன்ற சந்தோஷங்கள் ஒருபக்கம் இருக்க இன்றைய இளைஞர்கள் சாகசம் என்ற பெயரில் உயிரைப் பணயம் வைத்து இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்வது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், சக வாகன ஓட்டிகள் அதிர்ச்சிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

திருச்சி புறநகர் பகுதியில் சென்னை தேசிய நெடுஞ்சாலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்யும் இளைஞர்கள் ஆபத்தான முறையில் வாணவேடிக்கை உள்ளிட்ட பட்டாசுகளையும் அதன் முன்பக்கம் வைத்து வெடித்தது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளர்.

ஒரு இளைஞர் வாணவேடிக்கையை இருசக்கர வாகனத்தின் முன்பு கட்டி, அதனை கொளுத்தியவுடன் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்து இந்த வாணவெடி பட்டாசுகள் வெடித்து சிதறக்கூடிய காட்சிகளை சக இளைஞர்களே படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

மேலும், இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் உட்கார்ந்து கொண்டு சரவெடியை கொளுத்தி அதனை சுழற்றி சுழற்றி வெடிக்கக் கூடிய காட்சியும் பதிவிட்டுள்ளனர். ஏற்கனவே, காவல்துறை 'பைக் ஸ்டண்ட், வீலிங்' என்ற பெயரில் சாகசம் செய்யக்கூடாது என கடுமையான பல உத்தரவை பிறப்பித்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது நேற்று தீபாவளி அன்று இளைஞர்கள் இந்த ஆபத்தான முறையில் வாணவேடிக்கை பட்டாசுகளை வைத்து வெடித்துள்ளதால், காவல்துறையினர் அவர்களை தேடிவருகின்றனர். சாகசம் என்ற பெயரில் தங்களது உயிருக்கு மட்டுமல்லாமல், சாலையில் பயணிக்கும் பிற வாகன ஓட்டிகளுக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் இந்த இளைஞர்கள் ஈடுபட்டுள்ளதாக கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் இந்த வீடியோக்களை பதிவிட்டது யார்? என ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட இளைஞர்களை கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் வலைவீசித் தேடி வந்தனர். இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் வாணவேடிக்கை கட்டியது அஜய்(21) என திருச்சி மாநகர போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவர்கள் மீது வாகனத்தை அதிவேகமாக இயக்கியது தொடர்பாக, சட்டப்பிரிவு 279 கீழ் கள்ளாங்காடு பகுதியை சேர்ந்த அஜய், தஞ்சாவூரை சேர்ந்த மணிகண்டன் உள்ளிட்டோர் மீது திருச்சி மாவட்ட காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அஜய்யை கைது செய்த அரசு மருத்துவமனை காவல்நிலைய போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.

இதையும் படிங்க:மேற்குத்தொடர்ச்சி மலை படத்திற்கு வசனம் எழுதிய ராசீ.தங்கதுரை காலமானார்!

Last Updated : Nov 13, 2023, 5:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details