தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காதல் தோல்வியால் காவலர் தற்கொலை - காதல் தோல்வியால் காவலர் தற்கொலை

திருச்சியில் எஸ்.பி-யின் தனிப்பிரிவு காவலராகப் பணியாற்றி வந்தவர், காதல் தோல்வி காரணமாக எலி மருந்து உட்கொண்டு உயிரிழந்தார்.

காதல் தோல்வியால் காவலர் தற்கொலை
காதல் தோல்வியால் காவலர் தற்கொலை

By

Published : Feb 4, 2022, 5:44 PM IST

திருச்சி: லால்குடி காவல் நிலையத்தில் எஸ்.பி-யின் தனிப்பிரிவு காவலராகப் பணியாற்றியவர் சுரேஷ் (31). இவர் ஆசிரியை ஒருவரை காதலித்துள்ளார்.

கடந்த சில நாள்களுக்கு முன் அந்தப் பெண் தன்னிடம் பேச வேண்டாம் என்றும்; திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.

இதனால், மனமுடைந்த சுரேஷ் பெரம்பலூர் சென்று அங்குள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். அப்போது எலி மருந்தை உட்கொண்டு மயங்கமடைந்தார்.

இதனைக்கண்ட அருகிலிருந்தவர்கள், உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக திருச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

தற்கொலை தீர்வல்ல

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று (பிப். 04) அவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இதையும் படிங்க:அடக்கி ஆண்டக் கூட்டம்... ராம்குமாரின் வைரல் வீடியோ!

ABOUT THE AUTHOR

...view details