தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இளைஞரை மரத்தில் கட்டிவைத்து அடித்துக் கொன்ற கொடூரம்.. திருச்சியில் நடந்தது என்ன? - murder case

திருச்சி அருகே மர அறுவை மில்லில் திருட வந்த நபரை மரத்தில் கட்டி வைத்து அடித்து கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.

மரத்தில் கட்டி வைத்து அடித்தே கொலை
மரத்தில் கட்டி வைத்து அடித்தே கொலை

By

Published : Dec 3, 2022, 8:28 PM IST

திருச்சி:மணிகண்டம் அம்பேத்கர் நகர் பகுதியில் இயங்கி வரும் ஆஷா புரா மர அறுவை மற்றும் விற்பனை கடையில் மர்மநபர் ஒருவர் நேற்று மாலை மேலாளர் நரேந்தர் கைபேசியை பறிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவர் சத்தமிடவே மர்ம நபர் தப்பித்து சென்றுவிட்டார் எனக் கூறப்படுகிறது.

மீண்டும் அதே நபர் இரவு சுவர் ஏறி குதித்து அறுவை மில்லில் பணியிலிருந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பணியாளர்களிடம் பணத்தை பறித்ததாக கூறப்படுகிறது. அப்போது அவரை பிடித்து கட்டி வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் திருட வந்த மர்ம நபருக்கு பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலாளர் நரேந்தர் மணிகண்டம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த மணிகண்டம் போலீசார் மர்ம நபர் உயிரிழந்த இடத்தை பார்வையிட்டு, உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், சோகித்துல் சேக் (22), பைசல் ஷாக் (36), மப்ஜில் ஹூக் (28), ரசீதுல் ரஹ்மான் (22) ஆகிய 4 அசாம் மாநில பணியாளர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் விசாரணையில் உயிரிழந்த நபர் திருச்சி துவாக்குடி தெற்கு வாண்டையார் தெருவை சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் சக்கரவர்த்தி (33), இவருக்கு திருமணம் ஆகி உமா மகேஸ்வரி என்ற மனைவி உள்ளார் என தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து தகவல் கொடுத்த மேலாளர் நரேந்திரனிடம் விசாரித்த போது தான் வெளியூர் சென்று இரவு தான் வந்தேன், தனக்கு ஏதும் தெரியாது என காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்!

ABOUT THE AUTHOR

...view details