திருச்சி: துறையூர் அடுத்த வைரிசெட்டிபாளையம் ஏரிக்காடு பகுதி சேர்ந்த மூர்த்தி என்பவரது மகன் கார்த்திக் ( வயது 25). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான இளம் பெண் கிருஷ்ணவேணி ( வயது 23) என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்தது.
நேற்று(செவ்வாய்கிழமை) தாய் வீட்டுக்கு கணவர் வீட்டுக்கு திரும்பிய புது மணப்பெண் கிருஷ்ணவேணி தனது தாலியை கழற்றி வீட்டில் வைத்துவிட்டு மாயமானதாக தெரிகிறது. செல்போனும் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. அக்கம் பக்கத்தில் தேடியும் கிடைக்காததால், கணவர் கார்த்திக், உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் மனைவியை காணவில்லை என புகார் கொடுத்துள்ளார்.