திருச்சி மாவட்டம் சமயபுரம் நான்குரோடு பகுதியில் அரசுக்கு சொந்தமான மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு நேற்றிரவு (ஜன.6) 8 மணி அளவில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் வந்து கடனுக்கு மது பாட்டில்கள் தருமாறு விற்பனையாளர் பாலகிருஷ்ணனிடம் தகராறு செய்துள்ளது.
இருப்பினும் பாலகிருஷ்ணன் கடனாக தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் பீர் பாட்டிலால் பாலகிருஷ்ணனை தாக்கியது. இதனாள் அவர்களை பிடிக்க பாலகிருஷ்ணன் கடையில் இருந்து வெளிவந்துள்ளார். அப்போது அந்த கும்பலில் இருந்தவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.